சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்தது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே உள்ள வரட்டாறு ஓடையை தூர்வாரி அகலப்படுத்துவது குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள ஓடையை தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது:- சேலம் மாநகராட்சி பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் இருந்து வெளிவரும் மழைநீர் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
It has been raining continuously in Salem for the past few days. As a result, the water flowing out of the streams entered the houses and streets in the low-lying areas. In this situation Salem Astampatti Mandal TVS. Mayor Ramachandran, Commissioner Kristhraj, Advocate Rajendran MLA regarding the widening of the Varattaru stream near the bus stand. They visited and studied. They also visited and inspected the dredging of the stream in Saminathapuram area. At that time Mayor Ramachandran said:- Due to continuous rain in Salem Municipal Corporation areas, rainwater coming out from streams in various areas is causing disruption to the public as it flows into the roads and low-lying areas.
0 Comments