பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 46-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், போல் வால்ட், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்தநிலையில், மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் தடகள போட்டி நடைபெறுகிறது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
A regional junior level athletics competition was held yesterday at the Salem Mahatma Gandhi Sports Ground under the auspices of the School Education Department. In this, more than 46 government schools, government aided schools and matriculation schools from Ayodhyapatnam, Yercaud, Vazhappadi unions participated.3,000 meter race, pole vault, javelin throw, discus throw and hurdles were held separately for them. At the end, the top 3 students in each category were selected and qualified for the next round of competition held at the revenue district level.Meanwhile, Mettupatti Government Higher Secondary School is holding two days of athletic competition today (Thursday) and tomorrow (Friday). Various competitions including 100 meters, 200 meters, 400 meters and 800 meters races are going to be held in this, the officials of the education department said.
0 Comments