ரெயிலை கவிழ்க்க சதி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தின்னப்பட்டி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக சென்னை-சேலம் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பி மற்றும் கற்கள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர் அருள், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். ரெயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட இரும்பு கம்பி மற்றும் கற்களை அவர்கள் அகற்றினர். மேலும் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கல் மற்றும் கம்பியை வைத்து சென்னை-சேலம் இடையே இயக்கப்படும் ரயிலை கவிழ்க்க யாரேனும் சதி திட்டம் தீட்டி இருப்பார்களோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
Dinnapatti railway station is located near Omalur in Salem district. Trains plying on the Chennai-Salem route are operated through this railway station. In this situation yesterday, railway employee Arul informed the railway police that iron wire and stones have been placed on the track near the railway station. After this, the railway police rushed to the spot and conducted a thorough investigation. They removed iron bars and stones placed on the railway tracks. And who is plotting to overturn the Chennai-Salem train with stones and wires placed on the tracks? The police conducted an investigation from that angle.