Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Government

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. அஸ்தம்பட்டி, மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, ஹவுசிங்போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர்நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டாபெரிய புதூர், நகரமலை அடிவாரம், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, வினாயகம்பட்டி, ஏற்காடு.

Tomorrow (Saturday) monthly maintenance work will be done at Salem Astampatty substation. Due to this, power supply is stopped at the following places from 9 am to 5 pm.Astampatti, Maravaneri, Manakaddu, Chinnathirupathi, Ramanathapuram, Kannangurichi, Housing Board, Khilili, Korimedu, Ramakrishna Road, Alaghapuram, Rajaram Nagar, Shankarnagar, Gambar Street, Bharathi Nagar, 4 Road, Mittaberia Putur, Nagaramalai Adivaram, Sarada College Road, Chettisavadi, Vinayakampatti , accept.

சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளைமறுநாள் தொடங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளைமறுநாள் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டம் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 54 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

Breakfast program in 54 schools of Salem district will be started from tomorrow. Chief Minister M.K.Stalin has announced that the program of providing breakfast to government school students studying from 1st to 5th standard in Tamil Nadu will be implemented. The scheme will initially be launched in 1,545 government primary schools in the municipal, municipal, rural and hilly areas. Accordingly, the program of providing breakfast in 54 government primary schools in Salem district is to be implemented in the first phase. In other words, steps have been taken to implement the program of providing breakfast to the students studying in 54 government primary schools under the Salem Corporation and the preparatory work is underway.

336 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

336 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் மூலம் சிறுபான்மையினர் உலமாக்கள் மற்றும் பெண்கள் உள்பட பிற்படுத்தப்படடோர் சமூகத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 336 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், முகமது அமீன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) சத்ய பிரசாத் மற்றுமங் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Minister R.Gandhi provided welfare assistance worth Rs.56 lakh to 336 beneficiaries A ceremony was held to provide various welfare assistance to the beneficiaries of the backward community, including minority ulama and women, through the Backward and Minority Welfare Department of Ranipet District Collector’s Office.Collector Bhaskara Pandian presided. Handloom and Textiles Minister R.Gandhi attended as a special invitee and provided welfare assistance worth Rs.55 lakhs and 87 thousand to 336 beneficiaries.District Revenue Officer Kumareshwaran, District Panchayat Committee President Jayanthi Thirumurthy, City Council Presidents Sujata Vinod, Mohammad Amin, Backward Welfare Officer (In-charge) Satya Prasad and Assistant Collector (General) Suresh attended the function.

ஓடைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் வீடுகளில் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்தது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே உள்ள வரட்டாறு ஓடையை தூர்வாரி அகலப்படுத்துவது குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள ஓடையை தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது:- சேலம் மாநகராட்சி பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் இருந்து வெளிவரும் மழைநீர் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

It has been raining continuously in Salem for the past few days. As a result, the water flowing out of the streams entered the houses and streets in the low-lying areas. In this situation Salem Astampatti Mandal TVS. Mayor Ramachandran, Commissioner Kristhraj, Advocate Rajendran MLA regarding the widening of the Varattaru stream near the bus stand. They visited and studied. They also visited and inspected the dredging of the stream in Saminathapuram area. At that time Mayor Ramachandran said:- Due to continuous rain in Salem Municipal Corporation areas, rainwater coming out from streams in various areas is causing disruption to the public as it flows into the roads and low-lying areas.

சேலம் பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சேலம் வந்தார். முன்னதாக அவர் சேலம் கோட்டை பெருமாள் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து விவரம் கேட்டு அறிந்தார். முன்னதாக அவர் கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.

Kumbabhishekam was held at Salem Sugavaneswarar temple yesterday. Hindu Religious Charities Minister Shekhar Babu came to Salem yesterday to participate in it. Earlier he visited Salem Fort Perumal Temple. Then he inquired about the facilities provided to the devotees coming to the temple from the officials there. Earlier he went around the temple and had darshan of Sami.

13 ஆசிரியர்கள் தேர்வு

 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது

சேலம் மாநகர காவல்துறையில் அதிவிரைவு படை(Quick reaction Team) என்னும் புதிய படை சேர்க்கப்படுள்ளது.

சேலம் மாநகர காவல்துறையில்
அதிவிரைவு படை(Quick reaction Team) என்னும் புதிய படை சேர்க்கப்படுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அசம்பாவிதங்களை தடுக்க மற்றும் எதிர்க்க வல்லமை வாய்ந்த படையாக இது செயல்படும்.

சேலம் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முகாம் .

சேலம் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் 11 தொகுதிகளில் 1,216 இடங்களில் நடந்தது.

தொடர் மழைக் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருவதால்- மிகுந்த எச்சரிக்கையுடன் விநாயகர் சிலைகளைக் கரைத்திட வேண்டும்.

தொடர் மழைக் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் விநாயகர் சிலைகளைக் கரைத்திட வேண்டும், ஏரிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அறிவுரை.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்மல்ஹோதா இ.கா.ப அவர்கள்- விநாயகர் சிலைகளை நேரில் பார்வை.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்மல்ஹோதா இ.கா.ப அவர்கள் சேலம் மாநகரகத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.