Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Environment

பண்ணவாடியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் விசைப்படகு போக்குவரத்து திடீரென நிறுத்தப்படடதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். The public suffered due to the sudden stoppage of barge traffic in Pannawadi, the reservoir area of ​​Mettur Dam.

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 9-ந் தேதி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாகவும், இரவில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்தது. அதாவது வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 16 கண் மதகுகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பலத்த ஓசையுடன் ஆர்ப்பரித்து வெளியேறிய நிலைமை மாறி, தற்போது ஓசையின்றி தண்ணீர் மெதுவாக வெளியேறி வருவதை காணமுடிகிறது.

The water release through 16 sluices of Mettur Dam has been reduced to 7 thousand cubic feet per second. The flow of water to Mettur Dam decreased to 65 thousand cubic feet per second on the 9th. Yesterday, the water flow to the dam was 50,000 cubic feet per second and at night it was 40,000 cubic feet per second.In this situation, the water flow decreased further yesterday. That means water was coming at the rate of 30 thousand cubic feet per second. 30 thousand 400 cubic feet of water is being released from the dam per second.Based on this, the water released from the dam is released at the rate of 23 thousand cubic feet per second through the hydropower stations located near the dam, 7 thousand cubic feet per second through 16 eye sluices and 400 cubic feet per second for canal irrigation.More than one lakh cubic feet of water per second was being released through 16 eye sluices, but now water is being released at the rate of 7 thousand cubic feet per second. As a result, the situation where the water left open in 16 eye sluices was gushing out with a loud sound has changed, and now it can be seen that the water is slowly coming out without any sound.

ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 5-ந் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக ஏற்காடு- சேலம் மலைப்பாதையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 நாட்களாக இரவு, பகலாக போராடி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணி அளவில் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

It has been raining heavily at night for the past few days in Yercaud. Landslides occurred at more than 50 places on Yercaud-Salem mountain road due to heavy rains on the last 5th night. Due to this, traffic was completely affected.Following this, the highway department employees rushed to the spot and worked day and night for 2 days to repair the accident. The road was opened for traffic at around 11 am the day before yesterday.

மேட்டூர்:-மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்ததை அடுத்து, அதே அளவு தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது….

நேற்று இரவில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் பாதுகாப்பை கருதி இந்த 1.25 லட்சம் கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

It increased to 1.25 lakh cubic feet per second last night. Considering the safety of the dam, this 1.25 lakh cubic feet of water is being released as is. Due to this, the amount of water released through 16 eye sluices has been increased again. Water is being released at the rate of 23,000 cubic feet per second through the hydropower plants located especially near the dam.

சேலம் கன்னங்குறிச்சியில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

சேலம் கன்னங்குறிச்சியில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. ஏற்காட்டில் 7 சென்டி மீட்டர் மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 70 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ஏற்காடு அருகே கொட்டச்சேடு பகுதியில் கனமழையால் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – போக்குவரத்து துண்டிப்பு

ஏற்காடு அருகே கொட்டச்சேடு பகுதியில் கனமழையால் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – போக்குவரத்து துண்டிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு இந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு இந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தாரமங்கலம் ஏரி நிரம்பியது.

50 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் ஏரி நிரம்பியது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.