Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Devotional

அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் மாரியம்மன், அத்தனூரம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெகு விமரிசையாக தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது, தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், நள்ளிரவில் மின் விளக்குகளை பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி தீப்பந்தங்களை கையில் ஏந்தி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சக்தி அழைத்து வரும் வினோத வழிபாட்டு முறை இன்றளவும் மரபு மாறாமல் தொடர்ந்து வருகிறது. சிங்கிபுரத்தில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50 லட்சத்திற்கு மேல் செலவு செய்து சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பிரமாண்டமான இரு மரத்தேர்கள் வடிவமைக்கப்பட்டு தேர்த்திருவிழா ஒரு வாரத்திற்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் அத்தனூரம்மனுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்தி அழைக்கும் விழா நடைபெற்றது.

Singipuram Mariamman and Athanuramman temples are located next to Vazhappadi. In these temples, once in 10 years, an election ceremony is held with much fanfare. During this festival, unlike any other part of Tamil Nadu, no electric lights are used at midnight. The strange ritual of bringing power to the goddess by carrying torches in a traditional procession for a distance of 2 kilometers continues to this day.In Singipuram, after 16 years, the election festival is celebrated with much fanfare for a week, with two huge wooden theras with sculptures designed at a cost of over Rs.50 lakh.On the occasion of the festival, an invocation ceremony was held yesterday at midnight for Athanuramman, who is considered to be a powerful deity.

சேலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேலம் சூரமங்கலத்தில் அப்பா பைத்தியம் சாமி தனது 141-வது வயதில் ஜீவசமாதி அடைந்தார். அவரது நினைவாக சூரமங்கலத்தில் கோவில் கட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

Abba Paythiyam Sami passed away at the age of 141 in Salem Suramangalam. A temple has been built in Suramangalam in his memory and devotees are worshiping. In this situation, it was decided to conduct Kumbabhishekam for this temple. Accordingly, the temple restoration work was carried out in full swing. Following this, the temple consecration ceremony started on the 4th.Yagasala Pujas were conducted continuously. The temple kumbabhishekam was held yesterday as the culminating event of the festival.