Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Day: September 19, 2022

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. அஸ்தம்பட்டி, மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, ஹவுசிங்போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர்நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டாபெரிய புதூர், நகரமலை அடிவாரம், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, வினாயகம்பட்டி, ஏற்காடு.

Tomorrow (Saturday) monthly maintenance work will be done at Salem Astampatty substation. Due to this, power supply is stopped at the following places from 9 am to 5 pm.Astampatti, Maravaneri, Manakaddu, Chinnathirupathi, Ramanathapuram, Kannangurichi, Housing Board, Khilili, Korimedu, Ramakrishna Road, Alaghapuram, Rajaram Nagar, Shankarnagar, Gambar Street, Bharathi Nagar, 4 Road, Mittaberia Putur, Nagaramalai Adivaram, Sarada College Road, Chettisavadi, Vinayakampatti , accept.

சேலத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான தடகள போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 46-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், போல் வால்ட், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருவாய் மாவட்ட அளவில் நடக்கும் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்தநிலையில், மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் தடகள போட்டி நடைபெறுகிறது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

A regional junior level athletics competition was held yesterday at the Salem Mahatma Gandhi Sports Ground under the auspices of the School Education Department. In this, more than 46 government schools, government aided schools and matriculation schools from Ayodhyapatnam, Yercaud, Vazhappadi unions participated.3,000 meter race, pole vault, javelin throw, discus throw and hurdles were held separately for them. At the end, the top 3 students in each category were selected and qualified for the next round of competition held at the revenue district level.Meanwhile, Mettupatti Government Higher Secondary School is holding two days of athletic competition today (Thursday) and tomorrow (Friday). Various competitions including 100 meters, 200 meters, 400 meters and 800 meters races are going to be held in this, the officials of the education department said.

சேலத்தில் நடைபெற்ற மாமண்ணன் படப்பிடிப்பு நிறைவு.

சேலத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாகநடந்தது. சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழைய சூரமங்கலம், ஜருகுமலை, சோளம்பள்ளம், வெள்ளக்கல்பட்டி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படபிடிப்பு நடந்தது. படத்தின் இறுதி கட்ட படம் பிடிப்பு இன்றுடன் முடிவடைவதால் மாமன்னன் திரைப்படம் விரைவில் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The shooting of Mamannan, starring actor Udayanidhi Stalin, has been going on for the past few days in Salem. Filming took place in various locations including Astampatti, New Bus Stand, Old Suramangalam, Jarukumalai, Cholampallam, Vellakalpatti, Government Women Arts and Science College, Karuppur Government Engineering College under Salem district.Mamannan is expected to hit the theaters soon as the final shoot of the film is wrapping up today.