Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Day: September 13, 2022

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 9-ந் தேதி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாகவும், இரவில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்தது. அதாவது வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 16 கண் மதகுகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பலத்த ஓசையுடன் ஆர்ப்பரித்து வெளியேறிய நிலைமை மாறி, தற்போது ஓசையின்றி தண்ணீர் மெதுவாக வெளியேறி வருவதை காணமுடிகிறது.

The water release through 16 sluices of Mettur Dam has been reduced to 7 thousand cubic feet per second. The flow of water to Mettur Dam decreased to 65 thousand cubic feet per second on the 9th. Yesterday, the water flow to the dam was 50,000 cubic feet per second and at night it was 40,000 cubic feet per second.In this situation, the water flow decreased further yesterday. That means water was coming at the rate of 30 thousand cubic feet per second. 30 thousand 400 cubic feet of water is being released from the dam per second.Based on this, the water released from the dam is released at the rate of 23 thousand cubic feet per second through the hydropower stations located near the dam, 7 thousand cubic feet per second through 16 eye sluices and 400 cubic feet per second for canal irrigation.More than one lakh cubic feet of water per second was being released through 16 eye sluices, but now water is being released at the rate of 7 thousand cubic feet per second. As a result, the situation where the water left open in 16 eye sluices was gushing out with a loud sound has changed, and now it can be seen that the water is slowly coming out without any sound.

சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளைமறுநாள் தொடங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளைமறுநாள் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டம் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 54 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

Breakfast program in 54 schools of Salem district will be started from tomorrow. Chief Minister M.K.Stalin has announced that the program of providing breakfast to government school students studying from 1st to 5th standard in Tamil Nadu will be implemented. The scheme will initially be launched in 1,545 government primary schools in the municipal, municipal, rural and hilly areas. Accordingly, the program of providing breakfast in 54 government primary schools in Salem district is to be implemented in the first phase. In other words, steps have been taken to implement the program of providing breakfast to the students studying in 54 government primary schools under the Salem Corporation and the preparatory work is underway.

336 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

336 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் மூலம் சிறுபான்மையினர் உலமாக்கள் மற்றும் பெண்கள் உள்பட பிற்படுத்தப்படடோர் சமூகத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 336 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத், முகமது அமீன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொறுப்பு) சத்ய பிரசாத் மற்றுமங் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Minister R.Gandhi provided welfare assistance worth Rs.56 lakh to 336 beneficiaries A ceremony was held to provide various welfare assistance to the beneficiaries of the backward community, including minority ulama and women, through the Backward and Minority Welfare Department of Ranipet District Collector’s Office.Collector Bhaskara Pandian presided. Handloom and Textiles Minister R.Gandhi attended as a special invitee and provided welfare assistance worth Rs.55 lakhs and 87 thousand to 336 beneficiaries.District Revenue Officer Kumareshwaran, District Panchayat Committee President Jayanthi Thirumurthy, City Council Presidents Sujata Vinod, Mohammad Amin, Backward Welfare Officer (In-charge) Satya Prasad and Assistant Collector (General) Suresh attended the function.