மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. ஒரு சில இடங்களில் காவிரி ஆற்று கரையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
சேலம் விமான சேவை மீண்டும் தொடங்க, மத்திய விமான போக்குவரத்து துறையுடன் சேர்ந்து, மாநில அரசும் முயற்சி செய்து வருகிறது. தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி ஹிந்து நாளிதழ் பேட்டியில் தகவல்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனிடையே மேட்டூர் அணையில் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சியின் வாயிலாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் ஆலோசனை